News February 11, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (பிப்.10) மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி சுமை குறைத்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 14, 2026

ரயில் நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று பிப்.14 ல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி குழு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கத்தில் சென்றார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரைசீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் நந்தாதேவி, அன்பு ,ரேவதி கன்னியப்பன் உடன் இருந்தனர்.

News February 14, 2026

ராணிப்பேட்டை: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை நகரில் வருகின்ற பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை அன்று பழைய bsnl அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 300 பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக முகாம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை. மேலும் விவரங்களுக்கு 94 990 55 897 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!