News November 20, 2025
ராணிப்பேட்டையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் பகுதியில் கண்டெய்னர் லாரி மேம்பாலத்தின் மீது ஏறும்போது ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக காவல்துறையினர் 3 கிரேன் இயந்திரங்கள்மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. மேலும்,ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 25, 2025
ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

வாலாஜாவை அடுத்த அம்மூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், வாலாஜா புலித்தாங்கல் பகுதியில் குட்கா விற்ற சங்கர் (57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 பாக்கெட் குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.


