News October 11, 2025
ராணிப்பேட்டையில் ஒரு ஊட்டி!

ராணிப்பேட்டை என்றதும் சுற்றுலாப்பயணிகளுக்கு முதலில் நினைவில் வருவது காஞ்சனகிரி மலை தான். இது கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். பசுமையான இந்த மலை ஒரு சிறிய சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை கொண்டுள்ளது. மணி சத்தம் எழுப்பும் பாறை இம்மலையின் முக்கிய கவரும் அம்சமாகும்.வருடம் முழுவதும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இலக்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
தேர்தல் பணி தொடர்பாக முதற்கட்ட பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News March 6, 2026
ராணிப்பேட்டை: +2 தேர்வு நேரத்தில் நாட்டு வெடி வீச்சு

தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். இந்நிலையில் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட தகராறில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த மாணவர் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .
News March 6, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (மார்ச் 05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


