News April 25, 2025
ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News April 25, 2025
ராணிப்பேட்டை பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990 , 04172 – 275209; அரக்கோணம் – 04177 232190; மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
News April 25, 2025
ரயிலை கவிழ்க்க சதியா?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலங்காடு என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகளை மர்ம நபர்கள் கழற்றிவிட்டுள்ளனர். தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவ்வழியாக இயக்கப்படும் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
News April 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம் தக்கோலம் திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100