News July 11, 2025
ராணிப்பேட்டையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி, கலவை மற்றும் திமிரி ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. ஆகையால், புதுப்பாடி, வளவனூர், மாங்காடு, சக்கரமல்லூர், திமிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கலவை, கலவை புதூர், டி.புதூர், மேல்நெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூலை 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
காவல்துறை சார்பாக உலக மக்கள் தொகை குறித்து

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது என்னவென்றல் இன்று உலக மக்கள் தொகை நாள், உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும், ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
News July 11, 2025
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளைச் சார்ந்த 46 சேவைகளை வழங்க, 236 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக (ஜுலை15) முதல் ஆகஸ்ட் 08 வரை, 80 முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.