News September 14, 2024

ராணிப்பேட்டைக்கு தேர்தல் இல்லை

image

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில் அவர்களுடைய பதவிக்காலம் முடிவடையுள்ளதாக வந்த செய்தியை அடுத்து மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அளித்த கடிதத்தில்,2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 – அக்டோபர் 19 ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்தார்.

Similar News

News November 6, 2025

அரக்கோணத்தில் ரயில் மோதில் பலி

image

ராணிப்பேட்டை, அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

image

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் 45 என்பவரை கைது செய்தனர்.

News November 6, 2025

தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

image

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்

error: Content is protected !!