News April 2, 2025

ராணிபேட்டை SC/ST மாணவர்களுக்கு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் வரும் ஏப்.5ஆம் தேதி SC/ST மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு 11 (ம) 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். *SHARE TO FRIENDS

Similar News

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News April 3, 2025

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.

News April 3, 2025

சாலை விபத்தில் காவலர் மரணம்

image

ராணிப்பேட்டை சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலா் ஜெகன்(30) பலத்த காயமடைந்தாா். சென்னைக்கு பணிக்கு சென்ற போது விபத்தில் ஜெகன் காயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

error: Content is protected !!