News October 8, 2025
ராட்டினம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கட்டாயம்!

அரசு விழாக்கள் மற்றும் கோயில் திருவிழாக்களில் அமைக்கப்படும் ராட்டினங்களால் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நேர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, சேலம் மாவட்ட நிர்வாகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசு விழாக்களில் ராட்டினங்கள் அமைக்கும் நபர்கள் இனிமேல் மாவட்ட நிர்வாகத்திடம் முன்னதாக அனுமதி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
News November 9, 2025
சேலம் வழியாக கொல்லம் சிறப்பு ரெயில் இயக்கம்!

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.


