News February 25, 2026
ராஜ்யசபா MP சீட் கேட்கவில்லை: TTV தினகரன்

NDA கூட்டணியில் சுமுகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என TTV தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை. அதேபோன்று அதிமுகவிடம் ராஜ்யசபா MP பதவியையும் தான் கோரவில்லை என கூறியுள்ளார். பாஜகவின் வழிகாட்டுதலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி கெளரவமான தொகுதிகளில் தகுதியான அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவர் என அறிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 623 ▶குறள்: இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். ▶பொருள்: துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
News February 28, 2026
2 பேருக்கு மாதம் ₹82,000

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் மாதச் செலவுகள் ₹82,000 என்று தெரிவித்தது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அவர், 2BHK வீட்டின் மாத வாடகை ₹37,000, உணவு & மளிகைப் பொருட்களுக்கு ₹15,000, போக்குவரத்துக்கு ₹5,000, பிற செலவுகளுக்கு ₹4,000, வீட்டு உதவிக்கு ₹4,000, பொழுதுபோக்குக்கு ₹17,000 என 2 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுகளை பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களிடையே பேசு பொருளாகி வருகிறது.
News February 28, 2026
சுதந்திரத்திற்கு பிறகும் அடிமை மனநிலை நீங்கவில்லை: PM

இந்தியா ஒருகாலத்தில் வெளிநாட்டு நுட்பங்களை அப்படியே காப்பி அடித்து வந்ததாக ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில் PM மோடி பேசினார். சுதந்திரத்திற்கு பிறகும், நாட்டில் அடிமை மனநிலை நீண்ட காலமாக நீங்கவில்லை என்று விமர்சித்த அவர், தற்போது இந்தியா தனது பலத்தை அறிந்து அதிலிருந்து வெளியேறி வல்லரசுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிலைக்கு வளர்ந்துள்ளது; இதைக் கண்டு சிலர் ஆச்சரியப்படுவதாக தெரிவித்தார்.


