News November 22, 2025
ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர்173’ படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர்கள் தேர்வு குறித்து ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. யாரேனும் தங்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News January 25, 2026
நடக்க முடியாமல் தடுமாறும் ஹிருத்திக் ரோஷன்!

கட்டுமஸ்தான உடல், ஸ்டைலிஷான நடனம் என ரசிகர்களை கவரும் ஹிருத்திக் ரோஷனின், சமீபத்திய போட்டோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்கு கைத்தடியுடன் ஹிருத்திக் ரோஷன் வந்ததே இதற்கு காரணம். அவரது உடல்நலம் பாதிப்புக்கான முழுமையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அடுத்ததாக ‘கிரிஷ் 4’ படத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக அறிவித்த அவர், அதற்கான பணிகளில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார்.
News January 25, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது, மகிழ்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நகைக்கடன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாம் . கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 25, 2026
2026 தேர்தலில் வெல்லப்போவது யார்?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 2024-ல் பதிவான வாக்குகளை கொண்டு வெற்றி கணக்குகள் ஆராயப்பட்டு வருகின்றன. அந்த வகையில், DMK-26.93%, INC-10.67%, CPM-2.52%, CPI-2.15%, VCK-2.25%, MDMK-2.28%, IUML-1.17% என 46.97% பெற்றது. ADMK-20.46%, DMDK-2.59%, NDA-வில் BJP-11.24%, PMK-4.33%, AMMK-0.90%, TMC-0.94 என மொத்தம் 18.28% & NTK-8.22% பெற்றது. இத்தேர்தலில் TVK-வும் உள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது.


