News September 10, 2025

ராஜபாளையம்: 239 பேரிடம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

image

ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன், மனைவி தேவதாஸ் மரியநாயகம் மரக்கார் பிரியாணி கடை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவன பெயரில் கடை தொடங்குபவர்களுக்கு வருமானத்தில் 10%, மாதந்தோறும் ரூ.50,000 லாபம் ஈட்டலாம் என கூறி 239 பேரிடம் ரூ.13 கோடிக்கு மேல் மோசடி செய்தனர். இதில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மண்டல மேலாளரான சுந்தர்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Similar News

News September 10, 2025

விருதுநகர்: தேர்வு இல்லாமல் வேலை

image

விருதுநகர் இளைஞர்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்த தகுதியானவர்கள் 15.09.2025ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 10, 2025

விருதுநகர்: 1100 பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் 20 ஆய்வுக் குழுக்கள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து விதிமீறிய 22 பட்டாசு ஆலைகளின் பட்டாசு உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்தது. இதனால் அந்த பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த 1,100 ஆண், பெண் வேலையிழந்தனர். தவறுகள் சரி செய்து 2 மாதங்களாகியும் மீண்டும் உரிமம் வழங்கவில்லை என உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News September 10, 2025

விருதுநகர் அருகே தோட்டத்தில் சட்டவிரோத செயல்

image

விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு அறையில் இனாம்ரெட்டியாபட்டியை சேர்ந்த மாணிக்கம்(47), காரிசேரியை சேர்ந்த கருப்புசாமி(45) ஆகியோர் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக சூலக்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!