News September 27, 2025
ராஜபாளையம்: 2 விபத்துகளில் இருவர் பலி

நேற்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாரதிராஜா (19), ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் கல்குவாரியை நோக்கி சென்றபோது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல, ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதியதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 5, 2026
சிவகாசி: சிறுமிக்கு பிறந்த குழந்தை; இளைஞருக்கு வலை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமாலா நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை, அந்த தொழிலாளி பல முறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News January 5, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடங்களாக பிரிந்து ராமசாமி அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ராமசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


