News December 21, 2025
ராஜபாளையம்: கல்லை தூக்கிப்போட்டு கொன்ற நண்பன் கைது

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37), கூலித் தொழிலாளி. நண்பர் பாலமுருகன்(23), இருவரும் ஊரணி அருகே மது அருந்தினர். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. பாலமுருகன் ஆத்திரத்தில் வேல்முருகனை கீழே தள்ளி கல்லை எடுத்து தலையில் போட்டதில் அவர் உயிரிழந்தார். கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகரில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், தற்போது<
News December 26, 2025
விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை.!

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 26, 2025
சிவகாசி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம் (58). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். வயிற்று வலி தீராததால் மனமுடைந்த இருந்த கற்பகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


