News January 18, 2025
ராஜபாளையம் இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் விழா திடல் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் கருப்பசாமி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், செந்தில்குமார்(24), லோகேஷ்(22), ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
News April 29, 2025
விருதுநகரில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் தமிழ் வார விழாவை முன்னிட்டு மே.4 அன்று பொதுமக்களுக்கான 100 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை தவிர) ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஆர்.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளி, விருதுநகர் ஹாஜிபி பள்ளி, அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல்நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 96988-10699 இல் அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா இனங்களை இணைய வழி செலுத்த உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெக்டர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.