News February 27, 2026

ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

ராஜபாளையம் ராம் நகர் இமானுவேல் (61) தென்காசி சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 70 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. இதனை விசாரித்த ராஜபாளையம் வடக்கு போலீசார் மதுரை காளவாசல் மகேந்திரன் (34), எரியோடை சாமுவேல் (23), அருண்பாண்டியன் (29) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் மதுரை மத்திய சிறையில் பழகி, பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News March 10, 2026

விருதுநகர்: மயானத்தில் பேரதிர்ச்சி சம்பவம்

image

விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58), கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோர் மதுரை G.H-ல் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் முகத்தை கூட பார்க்காமல் உடலை வாங்கி சென்றுள்ளனர். விருதுநகர் மயானத்தில் முகத்தை பார்த்தபோது தான் உடல் மாறியது தெரியவந்தது. பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று அதிகாலை உடல்கள் மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!