News January 5, 2026

ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

image

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

சிவகாசி கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

image

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நேற்று மாணவர்கள் காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். (தற்கொலை தீர்வல்ல! தற்கொலை தடுப்பு எண்: 104)

News January 23, 2026

விருதுநகர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News January 23, 2026

விருதுநகர்: ரூ.555 செலுத்தினால்., ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.

error: Content is protected !!