News January 2, 2025
ராஜகிரி: தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பாபநாசம் தாலுகா, ராஜகிரி ஊராட்சி, மணல்மேடு கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவர் வீரையன் (67). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், நேற்று ராஜகிரியில் ஒருவரது வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத வகையில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
தஞ்சாவூர்: Diploma போதும்.. அரசு வேலை ரெடி!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 9, 2026
தஞ்சாவூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL!

தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!
News January 9, 2026
தஞ்சாவூர்: கல்லூரி மாணவர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த மதன்பாபு(20) என்பவர், தஞ்சாவூர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு படித்தார். இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால், அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


