News March 28, 2026
ராசி பலன்கள் (28.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 1, 2026
கேரளாவில் அடுத்து எந்த ஆட்சி? கருத்துக் கணிப்பில் ட்விஸ்ட்

கேரளாவில் 130 தொகுதிகளில் காங்.,+ 69-81 தொகுதிகளை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மனோரமா நியூஸ் & C-Voter-ன் கருத்து கணிப்பில் ஆளும் CPM+ 57-69 தொகுதிகளிலும், NDA 1-5 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மக்களிடையே K-Rail திட்டத்துக்கு எதிர்ப்பு, விவசாயிகள் அதிருப்தி, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவை LDF பின்னடைவுக்கான காரணமாக கூறப்படுகிறது.
News April 1, 2026
ஆணை விட பெண் அதிகமாக தூங்கணும்.. ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் Multi-tasking-ல் ஈடுபடுவதால், தங்களுடைய மூளை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அதற்கேற்ப அவர்களுக்கு போதிய உறக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மை பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
News April 1, 2026
18,000 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்: EPS

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக EPS கூறியுள்ளார். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு, அந்த குழந்தைகள் கதறுவது கேட்கவில்லையா என்றார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசு தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


