News January 14, 2026
ராசிபுரம் மாணவிக்கு பாலியல் வன்முறை!

ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் தட்டையான்குட்டை புதூரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (40). இவா் ஜவ்வரிசி உற்பத்தி ஆலையில் தொழிலாளியாக உள்ளாா். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினா் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சிலம்பரசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Similar News
News January 23, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
நாமகிரிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

நாமகிரிப்பேட்டை அருகே திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சிலம்பரசன்(45), நேற்று காலை ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றபோது, ராசிபுரத்திலிருந்து வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
தமிழக முதல்வரிடம் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை மனு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


