News November 23, 2025
ராசிபுரத்தில் நடந்த கோர சம்பவம்!

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
வையப்பமலை: கோயிலில் சமூக விரோதிகள் அட்டூழியம்

வையப்பமலை பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகைக் கோயிலில், நேற்று (ஜன. 25) இரவு புகுந்த மர்ம நபர்கள், சித்தர் சிலையின் முன்பாக மது அருந்தியும், நெருப்பு மூட்டியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோயிலில் இருந்த பூஜை பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீண்டும் நடக்காமல் தடுக்கவும் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


