News April 25, 2025
ராகு தோஷம் நீக்கும் நாகநாத சாமி கோயில்

திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலம் ராகு பகவானுக்குரிய தலமாகும். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் நாளை மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 8, 2026
புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 8, 2026
புதுச்சேரி: 24 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

புதுச்சேரியில் நடந்த போலி மருந்து வழக்கில், சிபிசிஐடி போலீசார் கைது செய்த 24 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியதாகக் கூறப்படும் உரிமையாளர் மதுரை ராஜா, ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் ராஜாவின் கூட்டாளிகள் ராணா மற்றும் மெய்யப்பன் ஏற்கனவே ஜாமீன் பெற்றிருந்தனர்.
News January 8, 2026
புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<


