News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை: குழந்தை பேறு அருளும் திருத்தலம்

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்று பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க.!
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை 2024-2025க்கான நடப்பாண்டில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 47 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் இருந்த 1974 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
மயிலாடுதுறை: இனி பட்டா பெறுவது ஈஸி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!


