News February 25, 2026

ராகுல் மனநலனில் அக்கறை காட்ட வேண்டும்: ஷெகாவாத்

image

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ராகுல் காந்தியின் செயல்பாடு நேர்மறை அரசியல் அல்ல என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். AI உச்சி மாநாடு தொடர்பான ராகுலின் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றது எனவும், அவர் தனது மனநல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறினார். முன்னதாக AI மாநாட்டில் இளைஞர் காங்., சட்டையை களைந்து போராட்டம் நடத்தியது உலக அரங்கில் பேசுபொருளானது.

Similar News

News February 28, 2026

சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

image

<<19259396>>கிருஷ்ணகிரி<<>> பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக ஐடி விங் X தள பதிவில், ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம் என்ற துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு சட்டத்தின் மீது எள்ளளவும் பயமில்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

News February 28, 2026

₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்கும் அரசு

image

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 28, 2026

ஈரானை நிர்மூலமாக்குவோம்: டிரம்ப்

image

ஈரானிய ஆட்சியிடமிருந்து US மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் நோக்கம் என டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுத வலிமை பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்ற அவர், அந்நாட்டின் ஏவுகணைகள், கடற்படை உள்ளிட்ட அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் No.1 நாடான ஈரான் அணுஆயுதங்கள் வைத்திருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!