News December 26, 2025
ராகுல் காந்திக்கு நன்றி சொன்ன மத்திய அமைச்சர்

கர்நாடகாவில், ஐபோன் தயாரிப்பு ஆலையில் 9 மாதத்துக்குள் 30,000 பேரை பணிக்கு அமர்த்தி, பாக்ஸ்கான் சாதனை படைத்தது. இதை SM-ல் பகிர்ந்த ராகுல் காந்தி, கர்நாடக காங்., அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை ஒப்புக் கொண்டதற்கு நன்றி; PM-ன் தொலைநோக்கு பார்வையால் இந்தியா உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருவதாக குறிப்பிட்டார்.
Similar News
News January 1, 2026
விஜய்யால் பாஜகவுக்கு சவால்: SG சூர்யா

விஜய்க்கு இருக்கும் திரைக்கவர்ச்சி பின்னணி, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு சவாலாக இருப்பதாக SG சூர்யா கூறியுள்ளார். திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ பாஜகவுக்கு இல்லை என்ற அவர், தவெகவை விடவும் பன்மடங்கு அதிகமாக பாஜக உழைத்தால் மட்டுமே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும், தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம் என தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.1) 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் இன்று தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 1, 2026
ராமதாஸ், அன்புமணியை ஒன்று சேர்ப்பேன்: ஜான்பாண்டியன்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு தான் மிகவும் மன வருத்தப்பட்டதாக ஜான்பாண்டியன் கூறியுள்ளார். ராமதாஸை வன்னியர்களுக்காக போராடிய போராளி என குறிப்பிட்ட அவர், தந்தையும் மகனும் இணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், இருவரையும் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


