News October 28, 2024
ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

ஆந்திரா, நெல்லூரைச் சேர்ந்தவர் விஷ்ணு சாய்ராம் (19). இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்திலுள்ள பொறியியல் கல்லூரில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரை ராகிங் செய்து வந்த 4ஆம் ஆண்டு மாணவர்கள், கடந்த 23ஆம் தேதி இவரை பைக்கில் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். யாரிடம் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 6 பேர் மீது ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
Similar News
News February 1, 2026
காஞ்சிபுரம் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் மயிலாப்பூரில் ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று (ஜன.31) வேலைக்கு செல்வதற்காக ‘பைக் டாக்சி செயலி’ மூலம் புக் செய்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து மாநகர பஸ் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் மீது பஸ் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 1, 2026
காஞ்சியில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (பிப். 1) அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
காஞ்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


