News November 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி அழைப்பின் பேரில் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News February 7, 2026
இனி முழு கவனமும் சட்டமன்ற தேர்தல் தான்: பிரேமலதா

தான் இப்போது ராஜ்யசபாவை நம்பி இல்லை. சட்டமன்ற தேர்தலில்தான் முழு கவனம் செலுத்தி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதியுடன் ராஜ்ய சபா சீட்டுக்கும் அழுத்தம் கொடுத்து வந்ததே தேமுதிக கூட்டணி முடிவின் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் குவிப்பதாக பிரேமலதா கூறியுள்ளதால், விரைவில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது தெரியவரும்.
News February 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 7, 2026
ரியல் எஸ்டேட்டை ஊக்குவிக்கும் RBI-ன் அனுமதி

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு (REIT) வங்கிகள் நேரடியாக கடன் வழங்க RBI அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை பத்திரங்கள் மற்றும் பங்குகளை மட்டுமே நம்பியிருந்த REIT-கள், இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன்களைப் பெறலாம். இதன்மூலம், அலுவலக கட்டிடங்கள் மற்றும் மால்கள் போன்ற திட்டங்களை மிக விரைவாக முடிக்க முடியும். வணிக ரியல் எஸ்டேட் மேலும் வலுப்பெறும்.


