News February 13, 2026
ரஷ்யாவில் Whatsapp-க்கு தடை

ரஷ்யா Whatsapp-ஐ தடை செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. பயனர்கள், உள்நாட்டு மெசஞ்சர் செயலியான ‘மேக்ஸ்’-க்கு மாறும்படி கூறி வந்த நிலையில், தற்போது இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். மேலும், Telegram மீது படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
திமுக கூட்டணியில் OPS… செல்வப்பெருந்தகை பதில்

மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவார் என <<19192311>>OPS<<>> பேசியது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அவர் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு OPS வந்தால் வரவேற்பீர்களா? என செல்வப்பெருந்தகையிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜனநாயக சக்திகள் யார் வந்தாலும் வரவேற்போம், அதில் மாற்றுக் கருத்து இல்லை என அவர் பதில் அளித்துள்ளார்.
News February 21, 2026
SPORTS 360°: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

▶ISL தொடரில் முகமதின் SC அணியை 0-2 என கோவா வீழ்த்தியது. ▶ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 தொடரில் இந்தியா 1-1 என சமனில் உள்ள நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெற உள்ளது. ▶டி20 உலகக்கோப்பையில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர் 8 போட்டிகள் தொடங்குகிறது.▶7-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் ஸ்பெயினை இன்று இந்தியா எதிர்கொள்கிறது.
News February 21, 2026
வரலாற்றில் இன்று

▶1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
▶1960 – கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் பிடல் காஸ்ட்ரோ அரசுடமையாக்கினார்.
▶1970- நடிகர், அரசியல்வாதி கருணாஸ் பிறந்த தினம்
▶1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் தரையிறங்கியது.
▶2013 -ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர். ▶ உலக தாய்மொழி நாள்


