News December 17, 2025

ரஷ்மிகாவின் Bachelor Party? வைரல் போட்டோஸ்

image

நடிகை ரஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. எனினும், இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. இச்சூழலில்தான், தற்போது ரஷ்மிகா தனது நெருங்கிய நண்பர்களுடன் இலங்கைக்கு ட்ரிப் அடித்துள்ளார். இந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட, லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

Similar News

News March 29, 2026

மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

image

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.

News March 29, 2026

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

image

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

இலங்கைக்கு எரிபொருள் உதவி செய்த இந்தியா

image

மேற்காசிய போரால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சில நாள்கள் முன்பு PM மோடியிடம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியிருந்தார். இதன் பலனாக 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் உதவிக்கு PM மோடி, EAM ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் நன்றி கூறியுள்ளார்.

error: Content is protected !!