News April 5, 2025

ரவுடிகளை கண்காணிக்க எஸ்பி உத்தரவு

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை பற்றியும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருளகடத்தலை தடுப்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

Similar News

News April 10, 2025

தமிழில் பெயர் பலகை ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பல வைப்பது சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

News April 9, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 9, 2025

61 மனுக்கள் நடவடிக்கைக்கு எஸ் பி உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 61 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த எஸ்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!