News July 8, 2025

ரயில் விபத்து குறித்து விசாரணை – கடலூர் ஆட்சியர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 08) காலை ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து கடலூர் ஆட்சியர் கூறுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் காரணமா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக கலெக்டர் சிபி ஆதித்ய செந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 8, 2025

கடலூர்: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் கேட்டை மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை காவல் துறையினர் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!