News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
Similar News
News November 15, 2025
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு உங்கள் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஜன.15 – பொங்கல் பண்டிகை தினத்தில் ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு நாளை (நவ.16) தொடங்குகிறது. போகி பண்டிகை தினமான ஜன.14 அன்று ஊருக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கிய நிலையில், 8:02-க்கே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன.
News November 15, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்து ₹92,400-க்கும், கிராமுக்கு ₹190 குறைந்து ₹11,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News November 15, 2025
காங்கிரஸை கலைத்து விடுங்கள்: KTR

பிஹார் தேர்தல் முடிவை போன்று தான் தமிழகத்திலும் முடிவு இருக்க போகிறது என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காங்., கட்சியை கலைத்து விடுங்கள் என்று கூறிய அவர், நாட்டுக்கும் ஊருக்கும் காங்., ஆகாது என்றும் விமர்சித்தார். வீணாய்ப் போன காங்., கட்சியை திமுக தான் தூக்கிப் பிடிக்கிறது என்றும் காட்டமாக தெரிவித்தார். பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது.


