News October 14, 2024
ரயில் விபத்தில் மோடி அரசு மீது சந்தேகம் உள்ளது – எம்.எல்.ஏ.

முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ கூறுகையில்: மோடி அரசு மத்தியில் அமைந்த பிறகு தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் நல்ல வேலையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. இந்த விபத்துகள் குறித்து ஆய்வு செய்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Similar News
News September 14, 2025
மன்னார்குடியில் சாலை மறியல் அறிவிப்பு

மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எள், பருத்தி, உளுந்து, போன்றவற்றிற்கு காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து செப்.16-ந் தேதி மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்.பி வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவல் விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 13, 2025
திருவாரூர்: ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

திருவாரூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <