News March 30, 2024

ரயில் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி

image

மோட்டாங்குறிச்சியை சேர்ந்த அருண் இவர் பொம்மிடி ஸ்டேஷனில் கேங் எண் 3ல், டிராக்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மற்ற ஊழியர்களுடன் நேற்று பொம்மிடி – புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்ப்பாராத  மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News February 4, 2026

தருமபுரியில் மூதாட்டியிடம் துணிகரம்!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிகாடை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் (பிப்.2) முள்ளிக்காடு மலை அடிவாரத்தில் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டியை கீழே தள்ளி காதில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

ALERT: தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

அதியமான் கோட்டை மற்றும் வெள்ளி சந்தை துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வெண்ணாம்பட்டி, அதியமான் கோட்டை, HPCL, ஏலகிரி, நாகர்கூடல், நீதிமன்ற வளாகம், சாமிசெட்டிபட்டி பரிகம், நல்லம்பள்ளி, பாளையம்புதூர், மானியதஅள்ளி, தோக்கம்பட்டி, சிவாடி, பாலகோடு சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News February 4, 2026

தருமபுரி: கிணற்றில் மிதந்த சடலம்!

image

சூடனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன். இவரது கிணற்றில் நேற்று முன்தினம் (பிப்.2) பெண் பிணம் மிதந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் அதேபகுதியை சேர்ந்த பச்சியம்மாள் (86) என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

error: Content is protected !!