News August 26, 2024
ரயில் பயணிகள் கவனத்திற்கு

மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். சேலத்துக்கு 5.40 மணிக்கும், கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.
Similar News
News July 6, 2025
சேலம் மாநகர காவல்துறை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 6, 2025
தடகளத்தில் தங்கம் வென்ற சேலம் காவலர்!

அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
News July 6, 2025
சேலத்தில் நாட்டுப்புற கலைகளுக்கு இலவச பயிற்சி!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007 தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!