News January 13, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் பயணிகளின் வசதிக்காக பொங்கல் பண்டிகையான நாளை (14.1.25) காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும். இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகவல் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
சேலம்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

சேலம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 9, 2025
சேலத்தில் அறிவித்தார் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்க இ-சேவை மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் திட்டம் மற்றும் நன்னிலம் மகளிர் நில திட்டம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து இதில் பயன் பெறலாம் என வலியுறுத்தியுள்ளார்.
News September 9, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செப்.09) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.