News December 30, 2025
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!

65 எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களின் வேகம் வரும் ஜன.1 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் பல வழித்தடங்களில் பயணிகளுக்கு 5 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும். முன்னதாக மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் அவற்றின் வேகம் 110 கிமீ-ஆக உயர்கிறது. இதற்கு தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரட்டை வழித்தடம் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
பிப்.12-ல் நாடு தழுவிய ஸ்டிரைக்!

மத்திய அரசை கண்டித்து வரும் பிப்.12-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.
News February 8, 2026
விஜய் 72 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை: EPS

விஜய் ஊழல்வாதி என்பதற்கு வருமான வரி ஏய்ப்பு வழக்கில் கோர்ட் வழங்கிய தீர்ப்பே சாட்சி என்று EPS தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு வெளியே வரும் துணிவில்லாமல் 72 நாள்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர் விஜய் என தெரிவித்த அவர், தனது கட்சி அலுவலகத்தையே 15 நாள்களுக்கு மூடிவைத்ததாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தவெக என்ற கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.


