News October 29, 2024
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.30, 31, நவ.03 ஆகிய தேதிகளில் இயக்கப்படவிருந்த ஈரோடு- சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (06094/06093) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Similar News
News August 19, 2025
ஆக.25 ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர் தேர்ந்தெடுக்கும் முகம் ஈரோடு வஉசி மைதானத்தில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான முன் ஏற்பாடுகளை கர்னல் அன்சுல் வர்மா நேற்று பார்வையிட்டார். ஈரோடு, சேலம் போன்ற 11 மாவட்ட இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
News August 19, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ; கலெக்டர் அறிவிப்பு

ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். விவசாய நிலங்களை அளவிடுதல், விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகளுக்கு மனு அளிக்கலாம்.
News August 19, 2025
ஈரோடு: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <