News April 15, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு 

image

காட்பாடி -அரக்கோணம் இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 17, 24, 30ம் தேதி ஆகிய நாட்களில் கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை -காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து புறப்படும் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 25, 2025

சேலம்: வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை!

image

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

சேலம்: தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.comஇணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!