News November 2, 2024

ரயில் பயணக் காதலனை திருமணம் செய்ய போலீஸ் உடை அணிந்த தேனி பெண் கைது

image

தேனி வடுகபட்டியை சேர்ந்தவர் அபிபிரபா இவர்க்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மகன் உள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். இந்நிலையில் தற்போது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்க்கு ரயிலில் திருவனந்தபுரம் சென்றார் அப்போது குமரியை சேர்ந்த சிவா என்றவர் அறிமுகம் கிடைக்கிறது. அவர் வீட்டை ஏமாற்றுவதற்கு போலீஸ் உடை அணிந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News July 8, 2025

தேனியில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 9ம்‌ தேதி முதல்15ம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடபட உள்ளது. வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 254510) எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

image

தேனி மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE IT

News July 8, 2025

தேனி: பல் மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

image

தேனி என்.ஆர்.டி., நகர் பகுதியை சேர்ந்தவர் பவிஷ்யா (20). இவர் மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரியில் 2.ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் படிப்பு மிக கடினமாக இருப்பதாக கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். தேர்வுக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று (ஜூலை.7) அதிகாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!