News April 25, 2024
ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்கால் ரயில் நிலைய 2-ஆவது தண்டவாளப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய கண்காணிப்பாளர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
புதுவை: விடுமுறையில் பள்ளிகளை இயக்க அறிவிப்பு

புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் 29-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
News January 8, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
News January 8, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


