News March 24, 2024

ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

மதுரையில் இருந்து 24.03.2024 (இன்று) 23.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 12687 மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில், 52 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், 25.03.2024 (நாளை) மதுரையில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் இதை முன்வைத்து பயணங்களை திட்டமிட அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News January 28, 2026

மதுரை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

மதுரை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

image

சோழவந்தான் இரும்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 35, இவரது மனைவி விஜய பிரபா 28. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜய பிரபாவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த விஜய பிரபா சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோழவந்தான் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை.

News January 28, 2026

மதுரை தெப்ப திருவிழா பணிகள் தீவிரம்

image

மதுரை, தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30 பணியாளா்கள் இந்தப் பணியை தொடா்ந்து செய்து வருகின்றனர்.

error: Content is protected !!