News March 24, 2024
ரயில் நான்கு நாட்களுக்கு ரத்து

நாகர்கோவில் – கோவை ரயில் சேவை இன்று (மார்ச். 24) முதல் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 24, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2025
அதிமுகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகல்

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான, இன்ஜினியர் சந்திரசேகர் இன்று தனிப்பட்ட பணி காரணமாக, தன்னை கட்சி பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
கோவை: கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️ கோவை கலெக்டர்- 0422-2301114, ▶️ காவல் ஆணையர்- 0422-2300250, ▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600, ▶️ மாநகராட்சி ஆணையாளர்- 0422-2390261, ▶️ மாவட்ட வருவாய்துறை அதிகாரி – 0422-2301171. இது போன்ற முக்கிய எண்களை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 10, 2025
தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.