News January 21, 2025

ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம்; போலீசார் விசாரணை

image

மறைமலைநகர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே இறந்த நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த நபர் மண்ணிவாக்கம், புவனேஸ்வரி நகரை சேர்ந்த மணிகண்டன்(44) என தெரிய வந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 9, 2026

செங்கல்பட்டு: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

BREAKING: செங்கல்பட்டில் இரட்டை படுகொலை

image

பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆறுமுகம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!