News May 24, 2024

ரயில் சேவையில் மாற்றம்

image

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓமலூர் – காருவள்ளி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, காரைக்கால்- எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் (16530) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாளை (சனிக்கிழமை) முதல் ஆகஸ்டு 20ந் தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 75 நாட்களுக்கு 45 நேரம் தாமத பராமரிப்பு கடைபிடிக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

ஏற்காட்டில் தீவிர சோதனை!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீயைத் தடுக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்சேர்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

தலைவாசல் அருகே பயங்கர விபத்து: குழந்தை பலி

image

பெரம்பலூர் சேர்ந்த அரவிந்த், திருமண நிகழ்வை முடித்துவிட்டு குடும்பத்துடன் காரில் ஊர் திரும்பியபோது,தலைவாசல் அருகே வீரகனூரில் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கவிழ்ந்து தம்பதி மற்றும் அவர்களது 4 வயது மகன் அமிழ்தமொழியன் படுகாயமடைந்தனர்.சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிறுவன் நேற்று உயிரிழந்தான்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News March 8, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (மார்.07) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!