News May 28, 2024

ரயில் சேவையில் இன்று மாற்றம்

image

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று(28.5.24) பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

சென்னை: ஏடிஎம் வாசலில் நூதன மோசடி

image

எம்.கே.பி.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பிஷு சர்தா (31). கேட்டரிங் ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஏ.டி.எம்-ல் பணம் செலுத்த சென்றார். அங்கிருந்த நபர், பணத்தை வாங்கி கொண்டு ஆன்லைன் வாயிலாக, வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எம்.கே.பி.நகர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!