News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
Similar News
News April 4, 2025
கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News April 3, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
News April 3, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 03.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது