News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும்.<
Similar News
News April 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு PM Apprenticeship Mela (PMNAM) நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் இந்த நிகழ்வில், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன. ITI தேர்ச்சி பெற்றவர்களும் NAC சான்றிதழ் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
News April 4, 2025
மூதாட்டியை தாக்கி கொன்ற தாய், மகள் கைது

சோழவரம் அருகே, பொதுக் கழிப்பறையில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று ஏற்பட்ட தகராறில், லட்சுமி (65) மீது சுந்தரி (55) மற்றும் அவரது மகள் கோமதி (30) சரமாரியாக தாக்குதல் நடத்தினர். லட்சுமி மயக்கமடைந்து விழுந்த நிலையில், அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனின்றி, அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து, தாய், மகளைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News April 3, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ( 03/04/2025) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் வேலைக்கு செல்வோருக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*