News April 24, 2025
ரயில்வே கூட்டத்தில் நெல்லை எம்பி பங்கேற்பு

மதுரையில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று நெல்லைக்கு தேவையான பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் தென்கை ரயில்வே பொது மேலாளர் சரத் ஶ்ரீவத்சா, மதுரை கோட்ட மேலாளர் சிவகுமார், தலைமை முதன்மை இயக்க மேலாளர் அஜய் கெளசிக், துணை பொது மேலாளர் சுசில்குமார் மௌரியர உள்பட பலர் ங்கேற்றனர்.
Similar News
News April 24, 2025
நெல்லை செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் வசதி

பயணிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை – செங்கோட்டை ரயிலில் எம்.பி ராபர்ட் புரூஸ் நேற்று பயணம் செய்தார். அப்போது, ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை உடனடியாக ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு, இன்று முதல் 6 கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என எம்.பி தெரிவித்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
News April 24, 2025
+2 கணினி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

நெல்லையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், கணினி இயக்குபவர் காலி இடத்திற்கு 1 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் +2 தேர்ச்சி மற்றும் கணினி படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே.6 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
நெல்லை- மும்பை கோடை ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில் புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.