News June 17, 2024
ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று காலை கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Similar News
News March 7, 2026
ராசி பலன்கள் (07.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 7, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

ஈரான் – USA, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய அடுத்த நாளே தங்கம் விலை சவரனுக்கு ₹7,000 அதிகரித்தது. அதன்பிறகு, தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் ₹6,520 குறைந்திருப்பது நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,000-க்கு கீழே சென்றுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 7, 2026
இனி மது வாங்க பெங்களூரு செல்வது வேஸ்ட்!

கர்நாடக அரசு இதுவரை மதுபான விலையை நிர்ணயம் செய்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் முதல் இக்கட்டுப்பாடு முழுவதுமாக நீக்கப்படுகிறது. இனி அரசுக்கு பதிலாக மது விற்பனை நிலையங்களே விலையை தீர்மானிக்கலாம். மேலும், வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்துள்ள அரசு, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மதுவிலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபட வாய்ப்புள்ளது.


