News December 19, 2024

ரயில்வே அமைச்சருடன் ராமநாதபுரம் எம்பி சந்திப்பு

image

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று சந்தித்தார். பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும், சென்னை – ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும், தங்கச்சிமடம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நவாஸ் கனி எம்பி அளித்தார்.

Similar News

News April 10, 2026

இராமநாதபுரம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி முதுகுளத்தூர் தொகுதியில் 20 பேரும், இராமநாதபுரம் தொகுதியில் 13 பேரும், திருவாடானை தொகுதியில் 21 பேரும், பரமக்குடி (தனி) தொகுதியில் 12 பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 உயிர்கள் பலி.!

image

பரமக்குடி அருகே புதுக்குடியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி, அவரது வயலில் நெல் அறுவடை முடிந்ததால் வயலுக்கு தீ வைத்தார். அருகே இருந்த, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் வயலில் தீ மெல்ல மெல்ல பரவியது. அங்கு 32 செம்மறி ஆடுகள் கிடையில் அடைக்கப்பட்டிருந்தன. பரவிய தீயால் 32 செம்மறி ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகின. முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!